PDF Google Drive Downloader v1.1


Report a problem

Content text Tamilum Thozhilnutpam Unit 2 Final VK VK.pptx

வடிவமைப்பு மற்றும் கட்டடத் தொழில்நுட்பம்
கட்டடக்கலை என்பது தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு அறிவியல் ஆகும். கட்டடக்கலை 64 கலைகளுள் ஒன்றாகவே கருதப்படுகிறது. தமிழகத்தில் உள்ள வீடு, மாளிகை, அரண்மனை, கோயில்கள் போன்றவை தமிழகக் கட்டட கலைக்கு எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன. சங்க காலம் தொட்டே முறையாகக் கட்டடங்களை அழகுற அமைப்பதற்கான “மனை நூல்கள்” இருந்தன. இதனை “நூலோர் சிறப்பின் முகில் தோய் மாடம்” என்று இளங்கோவடிகள் கூறுகின்றார். பண்டைக் காலத்திலிருந்தே ‘மயமதம்’ எனும் சிற்ப நூல் வழக்கிலிருந்துள்ளது. தென்னாட்டில் மயன் கொள்கையும் வடநாட்டில் விசுவகர்மாவின் கொள்கையும் வழக்கிலிருந்து வந்துள்ளமைக்குக் குறிப்புகள் உள்ளன. இத்தகைய நூல்களின் துணை கொண்டு இறைவனுக்கு கோட்டமும், மன்னருக்கு அரண்மனையும், பெருமக்களுக்கு மாடமும் மாளிகையும் திறம்பட வகுத்தனர். எடுத்துக்காட்டாக புகார், மதுரை, காஞ்சி, வஞ்சி, போன்ற நகரங்கள் இம்முறையினால் அமைக்கப்பட்டன. புகாரின் அமைப்பைப் பட்டினப்பாலை மற்றும் சிலம்பும் எடுத்துரைக்கின்றன. அதுபோல் மதுரையின் பொலிவைப் பரிபாடலும், காஞ்சியின் அமைப்பைத் தண்டியலங்காரமும் கூறுகின்றன. இன்றையப் பொறியியல் வல்லுநர்கள் போல் அன்றும் கோவில்களையும் மனைகளையும் அமைக்கக் கட்டடக்கலை நூலை அறிந்த புலவர்கள் இருந்தனர். அவர்களை “ நூலறி புலவர்” என்று நெடுநல்வாடை அழைக்கிறது. தமிழர்கள் மிக நீண்ட காலமாகவே ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நிலையாக வாழ்ந்து வருபவர்கள். தனித்துவம் வாய்ந்த ஒரு பண்பாட்டைக் கொண்டிருப்பவர்கள். மொழி, இலக்கியம், கலை போன்ற துறைகளில் கிறிஸ்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே உயர்நிலை எட்டியிருந்தவர்கள். இத்தகைய பின்னணியிலே, மக்கள் வாழ்வதற்கான இல்லங்களும், அரசர்களுக்கான மாளிகைகளும், கோவில்களும், பொதுக் கட்டடங்கள் பலவும் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இவையெல்லாம் அழிந்துபோகக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டதால் எதுவும் எஞ்சவில்லை. 6ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் ஆரம்ப கால கட்டுமான பொருட்களான சுடுமண், மரம், சுதை, மூங்கில், வைக்கோல், புல் மற்றும் செங்கல் ஆகியவை கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்பட்டன. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னரே தமிழ்நாட்டில் கற்களால் கட்டடங்கள் கட்டப்பட்டன. இக்கட்டடங்களில் மிகப் பெரும்பாலானவை கோயில்களே. இவை கட்டடக்கலையின் உயர் மரபைச் சார்ந்தவை. ஆனாலும் இவற்றோடு இணையாகச் சாதாரண மக்களுக்கான வீடுகளையும் கட்டடங்களையும் உள்ளடக்கிய இன்னொரு கட்டடக்கலை மரபும் இருந்தது. ஆறாம் நூற்றாண்டளவில் தொடங்கிய கற்கட்டட மரபு நாயக்கர் காலம் வரை வளர்ந்து வந்தது. இந்த தமிழர் நாகரிகத்தை ஒரு சிலர் திராவிடக் கட்டடக்கலை என்றும் அழைத்தனர். 2.1 சங்க காலத்தில் வடிவமைப்பு மற்றும் கட்டுமானங்கள்
கட்டடத்துறையில் வளர்ச்சி ஆதிமனிதன் இயற்கை சீற்றங்களில் இருந்தும் வன விலங்குகளிடமிருந்தும் தன்னை பாதுகாத்துக்கொள்வதற்காக குகைகளை தேடி ஒதுங்கியதாகவும் இதுவே மனிதர்களின் முதல் வாழிடம் என்பதும் பொதுவான கருத்து. ஆதிகால மனிதன் வெயில், மழை, காட்டு மிருகங்கள், காற்று போன்ற இயற்கை மூலகங்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்து கொள்வதற்கு ஓர் அமைப்பு வடிவிலான இடம் தேவைப்பட்டது. இந்த அமைப்பு வடிவிலான இடத்தை குகைகளிலிருந்து கற்றுக்கொண்ட மனிதன் இயற்கையில் கிடைத்த இலகுவான பொருட்களான மரம், தடி, கொடி, இலைகுழை, மண் போன்றவற்றை கொண்டு குடில்களை அமைத்து வாழ்ந்தார்கள். உணவுக்கான தேவை அதிகம் காணப்பட்டமையினால் அதனைத்தேடி பயணித்த மனிதர்கள் இருப்பிடங்களை மாற்றி அமைக்க முற்பட்டனர். இதன் பொருட்டு குடிசைகளை அமைப்பதற்கு புதிய புதிய முறைகளை கையாளத்தொடங்கினர். அவர்களால் அமைக்கப்பட்ட குடிசைகள் பல்வேறு வடிவங்களில் அமைந்தன. விவசாயத்தின் அறிமுகத்தோடு ஒரு பிரிவின மக்கள் நிரந்தரமாக ஓரிடத்தில் குடியேற முற்பட்டார்கள். அவர்கள் தமது வீடுகளை நிரந்தரமாக அமைத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. வேட்டையாடுவதில் ஈடுபட்ட மனிதர்களும், கால்நடை வளர்ப்பதில் ஈடுபட்ட மனிதர்களும் தமக்கு அருகில் கிடைத்த மரம் இலைகுழை, வேட்டையாடிய மிருகங்களின் தோல்களினாலும் கூடாரங்களை அமைத்து வாழப் பழகிக் கொண்டனர். பனிபடர்ந்த துருவப் பிரதேசங்களில் எஸ்கிமோக்கள் என்னும் மனிதக்குழுக்கள் பனிக்கட்டியை உபயோகித்து தமது மனைகளை அமைத்துக்கொண்டனர். இப்படியாக எண்ணற்ற மனைகள் அமையப்பெறத் தொடங்கின. மனித இனத்தின் தேவைகளும், அவனது அனுபவங்களும், நாகரிக வளர்ச்சியில் பல்வேறு தொழில் நுட்ப மாற்றத்தை கொண்டுவந்தன. இதனால் புதிய கண்டுபிடிப்புக்கள் ஏற்படலாயிற்று. மனிதர்கள் வாழ்ந்த மனைகளில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. ஓர் அறை, இரு அறைகள் என இருந்த மனைகள் சிறப்புப் பயன்பாடுகளுடன் பல வசதிகளைக் கொண்ட வீடுகளாக உருமாறின. இதனால் மனிதர்களிடையே ஓர் அறை, இரு அறைகள் என இருந்த மனைகள் சிறப்புப் பயன்பாடுகளுடன் பல வசதிகளைக் கொண்ட வீடுகளாக உருமாறின. இதனால் மனிதர்களிடையே சமனற்ற தன்மை, அதிகார வர்க்கத்தின் வளர்ச்சி, அரச இயந்திரங்களின் தோற்றம் என்பன இடம்பெற்றன. இதன் பொருட்டு கிராமங்களின் வளர்ச்சி, நகரமயமாக்கம் அடைந்த இடங்கள் போன்றவை கட்டடத்துறையில் வளர்ச்சி கண்டன. இப்படியாக கட்டிடக்கலையானது ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கான வளர்ச்சியைப் பெற்று வந்தன என கூறலாம்.
சுதை சுதை என்பது சுண்ணாம்பை நன்கு அரைத்துக் கரும்புச்சாறு, வெல்லச்சாறு, நெல்லிக்காய்ச்சாறு முதலியவற்றைக் கலந்து அரைத்து வச்சிரம் (GLUE) போல் செய்து அதைக் கொண்டு உருவங்கள் செய்வதாகும். சுதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கிலிருந்தன. பின்னாளில் சுண்ணாம்பிற்குப் பதிலாக சிமெண்ட் பயன்படுத்தப்பட்டது. மூங்கில் மூங்கில்கள் லேசானவை; அதே வேளையில் இரும்புக்கு நிகரான வலுவும் கொண்டவை. ஒரு கட்டுமானப் பொருளாக, மூங்கில் நிலையானது மட்டுமல்ல, பல நன்மைகளையும் கொண்டுள்ளது. புல் சங்ககால மக்கள் குரம்பைகளின் மேல் பல்வேறு வகையான புற்களைப் பயன்படுத்தி கூரையினை வேய்ந்துள்ளனர். குரம்பை என்பது சிறிய மனை அல்லது குடிலை குறிப்பதாகும். தேறலைப்புல், தருப்பைப்புல், தினைத்தாள், ஊகம்புல் இலைகளால் வேயப்பட்டக் கூரை முதலிய பல்வேறு புற்களையும் இலைகளையும் மேற்கூரையாகக் கொண்டு வீடுகளை அமைத்துள்ளனர். புல்லால் வேயப்பட்ட சிறிய குடிசையினை “புல்வேய் குரம்பை” என்று அகநானூறும், புறநானூறும் உணர்த்துகின்றன. மெல்லிய இலைகளால் வேயப்பட்ட குடிசைகளை உடைய ஊரை, “புல்இலை வைப்பின் புலம்“ என்று பதிற்றுப்பத்து கூறுகிறது. 2.2 சங்ககால கட்டுமான பொருட்கள்

Related document

x
Report download errors
Report content



Download file quality is faulty:
Full name:
Email:
Comment
If you encounter an error, problem, .. or have any questions during the download process, please leave a comment below. Thank you.